கொரோனா சமூக இடைவேளி எங்கே??



ஊரெல்லாம் சமூக இடைவெளியை பேண அரசு கோரிவருகின்ற நிலையில் அரச அமைச்சர் டக்ளஸோ குழுப்புகைப்படத்தில் மும்முரமாகியுள்ளார்.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுகின்ற சிவாச்சாரியர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் எதிர்கொள்ளுகின்ற நடைமுறைப் பிரச்சினைகள் தொடர்பாக  பிரதமரின் இந்து விவகாரம் தொடர்பான இணைப்பாளர் பாபு சர்மா இராமசந்திரக் குருக்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. 

படையினரால் நிர்வகிக்கப்படும் சிகிச்சை மையங்களில் தாராளமாக ரின் மீன் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், பாதிக்கப்பட்டிருக்கின்ற சிவாச்சாரியர்களுக்கான உணவு நடைமுறை மற்றும் ஆகமக் கடமைகளை மேற்கொள்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக அவதானம் செலுத்திதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளார்.

இதன்போது, சிவாச்சாரியர்களுக்கு  தேவையான சைவ  உணவுகள் ஆச்சார முறைப்படி பரிமாறப்படுவதை உறுதிப்படுத்துமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆலோசனை வழங்கப்பட்டது.



அதேவேளை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி தனிமைப்படுத்தல் பராமரிப்பு நிலையத்தில் தற்போது மூன்று சிவாச்சாரியர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ள வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி கேதீஸ்வரன், தேவையேற்படின் சிவாச்சாரியர்களுக்கான தனியான தொகுதி ஒன்றினை அமைப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.


No comments