கிளிநொச்சியிலும் மரணம்: வெள்ளவத்தையிலும் உச்சம்!



கிளிநொச்சி திருவையாறுப் பகுதியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணொருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

குறித்த வயோதிபபெண் உயிரிழந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு ஊடாக பி.சி.ஆர் மாதிரிகள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

குறித்த மாதிரிகள் கடந்த இரவு (21) யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே குறித்த பெண்ணுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

77 வயதுடைய குறித்த பெண் திருவையாறு பகுதியில் வசித்துவந்தவர் என்றும் அவருடைய மகன், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பணியாற்றுவதாகவும் அவருடைய குடும்பத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெண்ணின் சடலம், உறவினர் ஒருவர் முன்னிலையில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய வவுனியாவில் தகனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடையே கொழும்பில், பல பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்களாக 800 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொ​விட்-19 தொற்றொழிப்பின் தேசிய மத்திய நிலையத்தின் தகவல்களின் பிரகாரம் நாரஹேன்பிட்டியவில் கொரோனா தொற்றாளர்கள் 73 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

வெள்ளவத்தையில் 45 பேரும், அவிசாவளையில் 51 பேரும், தெஹிவளையில் 43 பேரும், மஹரகமவில் 56 பேரும், கல்கிஸையிலி 32 பேரும், பிலியந்தலையில் 74 பேரும் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.


No comments