ஹமாஸ் அரசியல் தலைவரும் இலக்கு! வீடு தரைமட்டமானது!!


காசாப் பகுதியில் அமைந்துள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் யேஹியா அல்-சின்வாரின் வீடு மீதும் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் முற்றாக அழிக்கப்பட்டதாகஇஸ்ரேல் அறிவித்துள்ளது.

அத்துடன் தாக்குதல் குறித்த காணொளி ஒன்றையும் இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் பெண்கள் உட்ப 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

11 கட்டிடங்கள் மீது இஸ்ரேல் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இக்கட்டிட இடிபாட்டுக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணிகள் பாலஸ்தீனியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments