மே 31வரை பயணக்கட்டுப்பாடு இருக்கும்!



இலங்கை முழுவதும் நடைமுறை படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு நாளை (17) அதிகாலை 4.00 மணிக்கு நீக்கப்படுகிறதென இலங்கை ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கு அமைவாக நாளை முதல் தேசிய அடையாள அட்டையை அடிப்படையாகக் கொண்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதி உண்டு. மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் நடைமுறையில் இருக்கும்..

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைவாக கடந்த 13 ஆம் திகதி இரவு 11.00 மணி முதல், நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தும் வகையில் பயணக் கட்டுப்பாட்டுக்கு இலங்கை ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டார்.

இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு எந்தவித தடையுமின்றி இதனை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக சம்பந்தப்பட்ட தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதனவும் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


No comments