கிராமசேவையாளர்களும் வீட்டில்!

கொரோனா தடுப்பூசி வழங்கலில் மோசடி நடந்துவருவதாக தெரிவித்து தாதியர் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் அடுத்து இலங்கை கிராம சேவகர் சங்கம் இன்று (25) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் குதித்துள்ளது.

சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை செலுத்தும் செயற்பாடுகள் தமக்குக் கவலையளிப்பதாகவும் அரசியல்வாதிகள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்களது குடும்பத்தினருக்கு மாத்திரம் தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றது.

கிராம சேகவர்கள், மாவட்ட செயலாளர்கள், சுகாதார ஊழியர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கும் வரையில் பணிப்புறக்கணிப்புத் தொடருமெனவும் கிராம சேவகர் சங்கம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே தாதியர் சங்கம் இதே குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்திற்கு அறிவித்துள்ளது.


No comments