வீட்டிலிருக்க கோருகிறார் யாழ்ப்பாண கொமாண்டர்!யாழ்.குடாநாட்டில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுவருகின்ற நிலையில் பருத்தித்துறை ஓடைக்கரை வீதி இன்று  முதல் மறு அறிவித்தல் வரை  முடக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பயண கட்டுப்பாடு அமுலில் உள்ள போது யாழ்ப்பாண மக்களை வீடுகளில் இருக்குமாறு யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கோரியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணியின்  இணைப்பாளர் என்ற ரீதியில், யாழில் தற்போதுள்ள கொரோனா  நிலைமை தொடர்பில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசிய நிலை காணப்படுகின்றது. 

எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமான ஒன்றாக காணப்படுகின்றது. எனினும் பொதுமக்களின் ஒத்துழைப்பு போதாமையாகவுள்ளது        

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் தேவையற்று வீதிகளில் நடமாடாது வீடுகளில் இருக்குமாறு யாழ்ப்பாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா கோரியுள்ளார்.


No comments