ரணில்-மைத்திரியிடம் வாங்கியது எவ்வளவு?

பன்னாட்டு அரங்கில் ஒவ்வொரு முறையும் கொலையாழிகளை தப்பவைத்துக்கொண்டிருக்கின்றனர்.ஆனால் சிங்கள நாடாளுமன்றில்

மட்டும் சர்வதேச விசாரணையென வீரவசனம் கூறிகொண்டு மறு புறத்தில் முள்ளிவாக்கால் தூபி இடிப்பு விடயத்தை ஆவணப்படுத்துமாறு ஐ.நாவுக்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதகின்றனர்.

ஆனால் அவர்கள் ரணில் - மைத்திரி அரசிடம் இருந்து பெற்றுகொண்ட சொத்துக்களையும்,சலுகைகளையும் ஐ.நாவில் ஆவணப்படுத்த தவறிவிட்டனர் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி. 

பத்து ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச விசாரணையை மூடி மறைத்து ரணில் அரசுக்கு முண்டு கொடுத்துகொண்டு கொலைகார ஆட்சியை கொண்டுவந்து தூபியை இடிக்கவிட்டுப்போட்டு தூபி இடிப்பு தொடர்பில் ஐ.நாவுக்கு போலிக் கடிதம் எழுதி மறுபடியும் மக்களை கூட்டமைப்பு ஏமாற்றிவிட்டுள்ளது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.


No comments