ஜேர்மனியில் புயலைக் கிளப்பியுள்ள போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள்!!


போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் ஜேர்மனியில் மிகப்பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அவற்றின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜெர்மனியின் மத்திய குற்றவியல் காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பவேரியாவில் மாகாணத்தில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் போலி சான்றிதழ்கள் உள்ளன என்றும் மற்ற பகுதிகளில் இது அதிக அளவில் உள்ளன என்று தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட மற்றும் அடையாள ஆவணங்களின் அடிப்படையில் ஆராயும்போது, தடுப்பூசி சான்றிதழ்களை மோசடி செய்வது ஒரு சிறிய எண்ணிக்கையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்படாமல் இன்னும் நிறைய உள்ளன. என்று காவல்துறை அலுவலக செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், தடுப்பூசி போடப்பட்டதாக போலி தடுப்பூசி சான்றிதழ்கள் வாங்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கையில் தளர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில், ஜெர்மனியும் முக்கிய இடத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments