திணறும் இலங்கை அரசு!கொரோனா முடக்கம் மத்தியில் தொடர்ந்து எரியும் கப்பல் இலங்கை அரசிற்கு தலையிடியை கொடுத்துவருகின்றது.

கடல் மற்றும்  கடற்கரை மாசடைதலை தடுக்க முடியாது இலங்கை கடற்படை திணறிவரும் நிலையில் ஆறு நிபுணர்கள் அடங்கிய நெதர்லாந்து குழுவொன்று கொழும்பு நோக்கி விரைந்துள்ளதாக இலங்கையின் அமைச்சர் ரொகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையின் மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான காலநிலை நிலவி வருகிறது. இதனால் மழையுடன் அமில மழை பெய்யும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் இலங்கை கடல் கட்டமைப்பு உட்பட முழு சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கப்பலில் உள்ள இரசாயனங்களினால் நீண்டகால பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என ஆணையத்தின் தலைவர் எஸ்.அமரசிங்க தெரிவித்துள்ளார்.இதனிடையே கடல் நீர் உள்ளே வருவதை தடுக்க தறப்பாள் தடைகளை இலங்கை கடற்படை நீர்கொழும்பு பகுதிகளில் கட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments