இலங்கை விமானங்கள் வேண்டாம்:சரக்கு ஒகே!


இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து  வரும் விமானங்கள் குவைட் நாட்டுக்குள் நுழைவதற்கு  மறுஅறிவித்தல் வரை தடைவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளில் கொரோனா வேகமாகப் பரவி வருவதன் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த நாடுகளிலிருந்து செல்லும் சரக்குவிமானங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்பதுடன்,மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து குவைட்டுக்கு வருபவர்கள் 14 நாள்கள் வேறொரு நாட்டில்தங்கியிருந்து குவைட்டுக்கு வருவதற்கு அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

No comments