திருகோணமலையில் 42 கொரோனா தொற்றாளர்கள்!!


திருகோணமலை மாவட்டத்தில் 42 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ரீதியாக திருகோணமலை (12 பேர்), கந்தளாய் (9 பேர்), கிண்ணியா (5 பேர்), மூதூர் (4 பேர்), ஹோமரன்கடவெல (3 பேர்), சேருவாவில (3 பேர்), குறிஞ்சாக்கேணி (2 பேர்), குச்சவெளி (ஒருவர்), உப்புவெளி (ஒருவர்).

திருகோணமலை மாவட்டத்திற்கு வெளியிடங்களில் இருந்து பயணிகளும் வாகனங்களும் நுழைவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான எல்லைகளில் பொலிசார் வீதி தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். அவசர தேவைகளுக்கு வருவோரும் வெளிச்செல்வோரும் அனுமதிக்கப்படுகின்றனர். வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.


No comments