ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! ஆசிரியர் உட்பட குழந்தைகள் பலி!!


ரஷ்யா நகரமான கசானில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பாடசாலை ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 7 மாணவர்கள் கொல்லப்பட்டனர். காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கசானை தலைநகராகக் கொண்ட டாடர்ஸ்தான் குடியரசின் ஆளுநர் ருஸ்தம் மின்னிகனோவ் தெரிக்கையில்: செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூட்டில் நான்கு ஆண் மற்றும் மூன்று பெண்  உயிரிழந்துள்ளனர் என்று கூறினார். இவர்கள் அனைவரும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் என்றார். அத்துடன் இந்த தாக்குதலில் மேலும் 12 குழந்தைகள் மற்றும் நான்கு பெரியவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உள்ளூர் அவசர அதிகாரிகளை மேற்கோள் காட்டி கசான் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் மாநில RIA நோவோஸ்டி செய்தி நிறுவனம் முன்பு செய்தி வெளியிட்டது. 

மொஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 700 கிலோமீட்டர் (430 மைல்) நகரமான கசானில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

19வயது தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தன்னுடைய பெயரில் துப்பாக்கியைப் பதிவு செய்து வைத்திருந்துள்ளார்.


No comments