இனஅழிப்பு:ஸ்ராலினிடம் காத்திருக்கும் சிவி!

 


இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான குரல் ஒலிக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.


இவ்வாறு தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கான வாழ்த்துச் செய்தியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.


2009ஆம் ஆண்டு தமிழ் ஈழப்பரப்பில் இடம்பெற்ற கொடூரமான இனவழிப்பின் தொடர்ச்சியாக இன்றுவரை தமிழர் பிரதேசத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பாக அது தொடருகின்றது. இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்புக்கு எதிராக அழுத்தமான குரல் ஸ்டாலின் மற்றும் தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப்பெறும் எனவும், இனவழிப்புக்கான நீதியையும், தமிழ் ஈழத் தமிழர்களுக்கான உரிமையையும் பெற்றுத்தருவதற்கு தமிழகத்திலிருந்து வலுவான குரல் ஒலிக்கும் என்றும் நாம் நம்பிக்கை கொள்கின்றோம்.


அதேபோல, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பொருளாதாரம், கல்வி மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் மிகவும் நெருக்கமான உறவை ஏற்படுத்துவதற்கும் ஸ்டாலினின் தலைமையின் கீழ் தமிழக அரசாங்கம் காத்திரமான பல நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றும் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments