கஞ்சாவுடன் வருகின்றது கொரோனா!இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக இந்தியாவிலிருந்து போதைபொருட்கள் வந்து சேர்கின்றமை அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் உட்புகுவது அச்சத்தை தோற்றுவித்துவருகின்றது.

காங்கேசன்துறை கடற்பரப்பில் பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் மிதந்து வந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் அவை இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.


இதேவேளை வீட்டுக்குள் கேரள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த  இளைஞன் ஒருவன் கைதாகியுள்ளான்.

கஞ்சாவை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞனே பருத்தித்துறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்திய மீனவர்களது அத்துமீறலை கண்காணிக்க சுகாதாரத்துறை கோரியுள்ள நிலையில் உள்ளுர் மீனவர்கள் தொடர்புகளை சட்டவிரோதமாக பேணுவது தொற்றினை பரவ வைக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது.


No comments