வவுனியாவிற்கும் வந்தது மரணம்!தென்னிலங்கை ஆட்சியாளர்கள் முகக்கவசமாவது மண்ணாங்கட்டியாவது என ஒருபுறம் திரிய வவுனியா பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவர் கொவிட் 19 தொற்றால் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே வவுனியா வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் நால்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் கடமைபுரியும் வைத்தியர்கள் மற்றும்   தாதிய உத்தியோகத்தர்களிற்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டது. பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அவர்களிற்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதேவேளை குறித்த வைத்தியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள்  தனிமைப்படுத்தப்படவுள்ளதுடன், தொற்று உறுதியானவர்களை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.


No comments