தமிழகத்திலிருந்து தப்பிவருவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!கொரோனா அச்சங்காரணமாக தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைந்து வருவபர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது.

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் பதுங்கியிருந்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு சுகாதர பிரிவினரின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  

கடந்த வாரம் தமிழகத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக மன்னார் பகுதிக்குள் நுழைந்த குறித்த நபர் , அங்கிருந்து பேருந்தின் மூலம் யாழ்ப்பாணம் சுதுமலை பகுதிக்கு வந்து வீடொன்றில் தங்கியிருந்துள்ளார். 

அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பிரகாரம் சுகாதார பிரிவினருடன் குறித்த வீட்டிற்கு சென்று அந்நபரை கைது செய்து, சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலின் பிரகாரம் பி.சி.ஆர். மாதிரிகள் பெறப்பட்டு அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.  

பி.சி.ஆர் முடிவுகள் வெளிவந்த பின்னரே குறித்த நபர் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஏற்கனவே மன்னார் பகுதியிலும் இவ்வாறு பதுங்கியிருந்த குடும்பமொன்று தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments