மின்னல் தாக்கம்: மூவர் உயிர் தப்பினர்!

 


மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று (06) பிற்பகல் இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.


இன்று மதியம் இடி, மின்னல் உடன் கூடிய மழை பெய்த நிலையில் பிற்பகல் 2.30 மணி அளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது மின்னல் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.


இதன்போது, ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

No comments