பிரேசிலில் துப்பாக்கிச் சூட்டுக்கு 25 பேர் பலி


பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு காவல்துறை அதிகாரி உட்பட 25 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நகரின் ஜாகரேசின்ஹோ பகுதியில் உள்ள ஒரு பாவேலாவில் நடந்த காவல்துறையின் நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தங்கள் கும்பலுக்காக குழந்தைகளை சேர்த்துக் கொள்கிறார்கள் என்ற தகவலைப் பெற்ற பின்னர் சிவில் காவல்துறை இந்த நடவடிக்கையைத் தொடங்கியது.

மெட்ரோ ரயிலில் இருந்த இரண்டு பயணிகள் மீது தோட்டாக்களால் தாக்கிய போதும் அவர்கள் உயிர் தப்பினர்.

நடவடிக்கையின் போது காவல்துறை  இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரே லியோனார்டோ டி மெல்லோ ஃப்ரியாஸ் இறந்ததை நகரில் உள்ள சிவில் காவல்துறை உறுதிப்படுத்தியது.  

உள்ளூர் செய்திகளின்படி, இந்த சோதனையில் குறிவைக்கப்பட்ட கும்பல் போதைப்பொருள் கடத்தல், மோசடி, கொலைகள் மற்றும் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபடுகிறது.

ரியோ டி ஜெனிரோ பிரேசிலின் மிகவும் வன்முறை மாநிலங்களில் ஒன்றாகும். மேலும் பரந்த பகுதிகள் குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன, அவற்றில் பல சக்திவாய்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments