யாழில் இருவர் மரணம்: ஆமி வைத்தியாசாலை திறப்பு!யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இரண்டு பொதுமக்கள் கொரோனா தொற்றினால் மரணமாகியுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

யாழ்.நகரப்பகுதியைச்சேர்ந்த 77 வயது ஆண் ஒருவரும், இளவாலையைச் சேர்ந்த 75 வயது பெண் ஒருவருமாக இருவரே யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணித்துள்ளனர்.

இதனிடையே வடமாகாணத்தில் இன்றைய தினம் 28 பொதுமக்கள் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.அவர்களுள் யாழ்.மாவட்டத்தில் 20பேரும், கிளிநொச்சியில் 07பேரும் மற்றும் முல்லைதீவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்று கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வைத்தியசாலை 230 படுக்கை வசதிகளுடன் தனது சேவையை இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments