சிங்கள கூலிப்படையால் முள்ளிவாய்க்காலில் தூபி.இடித்தழிப்பு!

இனஅழிப்பின் அடையாளமாக இறுதியுத்த பிரதேசத்தில் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுதூபி நேற்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  நேற்று மாலை கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி இலங்கை காவல்துறையினரும் அவர்களிற்கு பாதுகாப்பாக இராணுவமும் குவிக்கப்பட்டதுடன் நடுகல்லை நாட்ட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து அங்கிருந்து நடுகல்லை நாட்டிவைக்க வந்திருந்த மதத்தலைவர்கள்,பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர்.

எனினும் இரவிரவாக படையினர் அங்கு குவிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு எற்கனவே நிறுவப்பட்டிருந்த தூபி அடித்துடைக்கப்பட்டுள்ளதுடன் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  நேற்று மாலை கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டிருந்த பொது நினைவுக்கல்லும் எடுத்து செல்லப்பட்டுள்ளது.


இலங்கை இராணுவ பிரசன்னத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கை தமிழ் மக்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments