மூன்று நாள் முடக்கம்!இலங்கை முழுவதும் நாளை வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் வரும் 17ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இந்த சாதாரண ஊரடங்கு  உத்தரவு காலத்தில் எவரும் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை முழுவதும் மூன்று நாட்களுக்கு அமுலாகும் வகையில் வர்த்தக நிலையங்களும் பூட்டப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை , சனிக்கிழமை , ஞாயிற்றுக்கிழமை (14,15,16) ஆகிய மூன்று தினங்கள் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்படுவதுடன் மருந்தகங்கள் மாத்திரம் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் திறக்க அனுமதிக்கப்படுகின்றது.

மேலும் மக்களின் நடமாட்டமும் கட்டுப்படுத்தப்படுவதுடன் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் காவல்துறை அறிவித்துள்ளது.


No comments