முள்ளிவாய்க்கால் நினைவில் அப்பிள் மரம்!! யேர்மனியில் மக்கள் சுடரேற்றி அஞ்சலி!

முள்ளிவாய்க்கால் நினைவுகளை நீடித்து நிலைக்கச் செய்யும் வகையில் யேர்மன் தலைநகர் பேர்லின் மண்ணில் அமைந்திருக்கும் மிகப் பெரும்

பூங்காவனத்தில் 2012 ஆண்டு அப்பில் மரம் நாட்டப்பட்டது. கடந்த ஆண்டுகள் போன்று இம்முறையும் பேர்லின் வாழ் தமிழ் உறவுகள் இம் மரத்தை பார்வையிட்டு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தினார்கள் .

நாம் நாட்டிய மரத்தின் ஊடாக தமிழின அழிப்பில் மாண்டுபோன உறவுகளை நினைவு கூருவது மட்டும் அல்லாது வேற்றின மக்களுக்கும் தமிழின அழிப்பு சார்ந்த செய்தியை கடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இப் பூங்காவுக்கு செல்லும் பல்லாயிரக்கணக்கான யேர்மனிய மக்கள் தமிழர்களின் இனப்படுகொலை செய்தியை அறியும் வண்ணம் “எப்படி அந்த மரம் தனது வேர்களை ஆழமாய் வளர்த்து மண்ணுக்குள் நிற்கின்றதோ அதே போல் தாயகத்தில் பல்லாயிரக்கணக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவுகள் எத்தனை வருடங்கள் சென்றாலும் எமது நெஞ்சத்தில் வேர் ஊண்டி நிற்கும்” . என்ற வாசகம் யேர்மன் மொழியில் பலகையில் பொறிக்கப்பட்டு மரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

No comments