பெருமெண்ணிக்கையில் கொரோனா:முல்லைதீவு முடக்கம்!இன்று (17) ம் திகதி புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இன்று இரவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ,புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு காவல்துறை பிரிவுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு காவல்நிலைய பிரிவில் அடங்குகின்ற நிலையில் நாளை நினைவேந்தல் தடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முல்லைத்தீவு  நீதவான் நீதிமன்றம் இன்று வழங்கிய திருத்திய கட்டளை பிரகாரம் "முள்ளிவாய்க்கால் நினைவுதினம் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவுகூரப்படலாம்." என அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதிப் போரில் கொல்லப்பட்ட உறவுகளை நினைவுகூரும் ‘முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின்’ 12ஆம் ஆண்டு நினைவேந்தல் உலகெங்கிலும் நாளை செவ்வாய்க்கிழமை அனுஸ்டிக்கப்படவுள்ளது.

இந்நிலையிலேயே தற்போது புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையினை காரணங்காட்டி முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments