புதுக்குடியிருப்பு கொத்தணி:86 உறுதியானது!இன்று திங்கட்கிழமை புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்களில் 261பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

எனினும் ஆடைத் தொழிற்சாலையில் அவர்களிடமிருந்து பெறப்பட்ட 86 மாதிரிகளில் 61 பேருக்கு இன்று திங்கட்கிழமை இரவு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஆடைத் தொழிற்சாலை கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதனையடுத்து அங்கு பணியாற்றும் 926 பேருக்கும் இன்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

அப்போதே ஊழியர்களில் 261பேருக்கு கொரோனா தொற்று சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

இதனிடையே இன்று திங்கட்கிழமை இரவிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை ,புதுக்குடியிருப்பு ,முல்லைத்தீவு காவல்துறை பிரிவுகள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையினை காரணங்காட்டி புதிதாக ஏற்பட்டுள்ள கொத்தணியினை காரணங்காட்டி முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments