ஒரே நாளில் 486 பேர் தமிழகத்தில் இறப்பு!


கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாட்டு மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு உள்ளது. தமிழகத்தில் தொற்றின் அளவு ஏழு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. எனினும் இதுவும் மிக அதிக அளவுதான் என்பது குறிப்பிடத்தக்கது. 
வெ

வள்ளியன்று தமிழ்நாட்டில் 31,079 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் தொற்றின் மொத்த எண்ணிக்கை 20,09,700 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 486 பேர் இறந்தனர். இது, இதுவரையிலான அதிகபட்ச ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையாகும். இதனுடன் தொற்றால் பாதிக்கப்பட்டு தமிழகத்தில் உறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 22,775 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று 31,255 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது 3,12,386 ஆக உள்ளது.

No comments