சீன மொழி தெரிந்தாலே வேலை வாய்ப்பு:வாசுதேவ!முன்னாள் கம்யூனீஸ்ட்டாக அடையாளப்படுத்தப்பட்ட வாசுதேவ நாணயக்கார தற்போது ஆட்சியாளர்களது ஊதுகுழலாகியிருக்குமொருவர்.

சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்துவரும் நிலையில் அதற்கும் புதிய வியாக்கியானத்தை அவர் வழங்கியுள்ளார்.

சீனாவிலோ அல்லது சீனா சார்ந்த தொழில் துறைகளில் இணைவதாயின் சீன மொழி அத்தியாவசியமாகும் என நீர்வளத் துறைஅமைச்சரும் இரத்தினபுரி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார புதிய விளக்கமளித்துள்ளார். 

சமூக வலைத்தளங்களில் சீனா, சீன மொழி மற்றும் சீனாவின்கலாசாரங்கள் குறித்து கேலிச் சித்திரங்கள் தகவல்கள் பரிமாறப்படுவது குறித்து அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது சாதாரண விடயமாகும். சீன நாட்டில் அல்லது சீனா சார்ந்தஇடங்களில் தொழில் புரிவதாக  இருந்தாலும் சீன மொழித் திறமை இருந்தால் அது ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனத் தெரிவித்தஅவர், தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதற்கு இது ஒரு மேலதிகத்தகைமையாகவும் நன்மையாகவும் அமையும் என்றார்.


No comments