வடக்கிற்கு ஊசி போட குழு நியமனம்!யாழிற்கு ஒதுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை மாத்தறைக்கு திருப்பியவிவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் யாழில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலகத்தில் நடந்துள்ளது.

தடுப்பூசி வழங்கல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டத்தில்  மாவட்ட செயலருடன்  மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா , வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வடக்கில் கொரோனா தடுப்பூசிகளை போடுவதற்கான முன்னுரிமை தொடர்பில் ஆராய மருத்துவர்களை கொண்ட ஜந்து பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments