ஊசி போட்ட சுமா அன் கோவும்:சஜித்தும்முன்னால் வீரவசனங்களை பேசியவாறு தாம் உயிர்பிழைக்க சுமந்திரன் அன்கோ முண்டியடித்து தடுப்பூசி போட்டுக்கொண்டமை அம்பலமாகியுள்ளது.

தனக்கு கொரோனா தொற்றினாலும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசியை நான், ஏற்றிக்கொள்ள மாட்டேன் என சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்ததுடன் தற்போது மனைவி சகிதம்  சிகிச்சை பெற்றுவருகின்றார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவரும் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் அண்மையில் உரையாற்றும் போது, “ தனக்கு கொரோனா தொற்றினாலும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள மாட்டேன்’ எனத் தெரிவித்திருந்திருந்தார்.

இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்திருந்த அவர், “தடுப்பூசிகளை ஏற்றும்போது ஒரு பட்டியல் இருக்கவேண்டும். முதலாவதாக சுகாதார பிரிவினர், அவர்களுக்கு உதவும் பாதுகாப்பு தரப்பினர், வயதானவர்கள் என்றடிப்படையில் முன்னுரிமை பட்டியல் உள்ளது. ஆகையால், தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதில்லை என தீர்மானித்தேன்.

வரிசையை மீறி, நான் எப்படி தடுப்பூசியை ஏற்றிக்கொள்வேன். எனக்கு வெட்கம், அச்சம் இருக்கிறது. கொரோனா தொற்றினாலும் பரவாயில்லை, நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசியை நான், ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்றார்.

ஆனால் பொத்துவில் முதல் பொலிகண்டி நாயகனென தானே சொல்லிக்கொண்ட சாணக்கியன் முதல் சுமந்திரன் ஈறாக இலங்கை படைமுகாமில்  தடுப்பூசி போட்டமை அம்பலமாகியுள்ளது.


No comments