சஜித்திற்காக பிரார்த்திக்கின்றனராம் கோத்தாவும் மகிந்தவும்!கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட எதிர்கட்சி தலைவர் சஜித் மற்றும் வரது பாரியார் மீண்டு வர கோத்தபாய முதல் மகிந்த ராஜபக்ஸ வரை பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து சமூக ஊடகங்களில் வழி தமது பிரார்த்தனையினை கோத்தா,மகிந்த தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் ச.தணிகாசலத்திற்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில் வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடமையாற்றும் ஊழியர்களிற்கு எழுமாறானவகையில் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அன்றையதினம் பிரதேச சபையின் தவிசாளர் தவிர்க்க முடியாத காரணத்தினால் சமூகமளித்திருக்கவில்லை.

இதையடுத்து, மறுநாள் வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு சென்ற அவர் பரிசோதனையினை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது அவருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.


No comments