முல்லைதீவு விடுவிப்பு:ஆனாலும் தடை!


முல்லைத்தீவு மாவட்டத்தில் முடக்கப்பட்ட மூன்று பொலிஸ் பிரிவுகளில் 11 கிராம அலுவலர் பிரிவுகளை தவிர ஏனையவை விடுவிக்கப்படுவதாக

அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவில்  தேவிபுரம்,புதுக்குடியிருப்பு மேற்கு,புதுக்குடியிருப்புகிழக்கு,மல்லிகைத்தீவு,மந்துவில்,கோம்பாவில்,உடையார்கட்டு வடக்கு,உடையார்கட்டு தெற்கு, வள்ளிபுனம் ஆகிய 9 கிராம அலுவலர் பிரிவுகள் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.

ஏனைய 10 கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே  முள்ளியவளை பொலிஸ் பிரிவில் முள்ளியவளை வடக்கு,முள்ளியவளை மேற்கு ஆகிய இரண்டு கிராம் அலுவலர் பிரிவுகளை தவிர ஏனைய அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளும் விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.

விடுவிக்கப்பட்ட பகுதிகளிலும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தவிர்ந்த ஏனைய பொதுமக்கள் அடையாள அட்டை நடைமுறைக்கு அமையவே நடமாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் பிரிவுகளிலும் எல்லா கிராம அலுவலர் பிரிவுகளிலும் தொற்றாளர்கள் இருந்த போதும் இன்று மீண்டும் நாடளாவிய பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதால் மக்களின் அத்தியாவசிய தேவைகள் கருதியே முடக்கத்தில் இருந்து குறித்த 54 கிராம அலுவலர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. எனவே எங்கள் பகுதிகளில் பிரச்சினை இல்லை என்று அசண்டையீனமாக செயற்படாது பொறுப்புணர்வுடன் செயற்படுவோம் மீண்டும் முடக்க நிலையை தவிர்ப்போம் என அழைப்;பு விடுக்கப்பட்டுள்ளது.


No comments