நெப்போலியனின் வளர்ப்பு மகளின் வைரங்கள் (இலங்கை வைரங்கள்) ஏலத்தின் விற்பனை


பிரெஞ்சு பேரரசரசன் நெப்போலியன் போனபார்ட்டின் (Napoleon Bonaparte) வளர்ப்பு மகள் ஸ்டீபனி டி பியூஹார்னைஸ் (Stephanie de Beauharnais)  அணிந்த வைர நகைகள் சுவிற்சர்லாந்தில் ஜெனீவாவில் கிறிஸ்டி ஏலவிடும் நிறுவனம் ஏலத்தில் விற்பனை செய்திருக்கிறது. அத்துடன் அந்த ஏல விற்பனையில் முன்னாள் போர்த்துக்கல் இராணியின்  கீரீடமும் ஏல விற்பனைக் வந்திருந்தது.

நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற ஏல விற்பனையில் நெப்போலியனின் வளர்ப்பு மகளின் ஒன்பது நகைகளும் தனித் தனியாகவும், போர்த்துக்கல் இராணியின் கீரீடமும் 2.97 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (2.7 மில்லியன் சுவிஸ் பிராங்) ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

1800 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த நீலநிற வைர நகைகள் இலங்கையைச் சேர்ந்த 38 வைரக்கற்களால் உருவாக்கப்பட்டிருந்தது.

நெப்போலியன் தனது வளர்ப்பு மகளின் திருமணத்திற்காக 1806 ஆண்டு வழங்கப்பட்ட நகைகள் என நம்பப்படுகிறது.

No comments