மோதல்கள் 100க்கு மேற்பட்போர் பலி! படைகளைக் குவிக்கும் இஸ்ரேல்


இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையேயான மோதல்கள் உக்கிரமடைந்து வருகின்றன. கடந்த சில நாட்கள் நடைபெற்ற இரு தரப்பு தாக்குதலிலும் 100க்கு மேற்பட்ட பாலஸ்தீனியர்களும், 7 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதேநேரம் காசாவிலிருந்து ஹமாஸ் போராளிகள் 1000 மேற்பட்ட உந்துகணைகளை இஸ்ரேல் மீது ஏவியிருந்தது.

இந்நிலையில் காகா எல்லைப்பகுதியில் தரைவழி இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இஸ்ரேல் இராணுவம் படைகளைக் குவித்து வருகிறது. இங்கு 7000 இராணுவத்தினரும் கவசப்பிரிவினரும் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேநேரம் லெபனாலிலிருந்தும் இஸ்ரேலின் வடக்கு கடற்கரையை நோக்கி 3 உந்துகணைகள் வீசப்பட்டுள்ளன என இஸ்ரேல் கூறியுள்ளது.

No comments