பிரான்சு கொலம்பஸ் நகரில் தமிழினவழிப்பு நினைவேந்தல்!

தமிழின அழிப்பின் நினைவு நாளான மே 18 12 ஆவது ஆண்டின் நினைவு சுமந்தும் பிரான்சு நாட்டில் பாரிசின் புறநகர்ப்பகுதிகளில் கவனயீர்ப்பு

நிகழ்வுகள் அந்தந்த மாநகரத்தில் உள்ள பிராங்கோ தமிழ்ச்சங்கங்கள் நடாத்திவருகின்றன.

இன்று 13.05.2021 கொலம்பஸ் என்னும் பிரதேசத்தில் காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை நினைவேந்தல் அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பில் மாநகர உதவி முதல்வர் உட்பட மாநகரசபை உறுப்பினர்களும், அப்பிரதேசம் வாழ் மக்கள் இளையவர்கள் கலந்து கொண்டதுடன் துண்டுப்பிரசுரமும் வழங்கினர்.

நேற்று இரவோடு இரவாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இராணுவத்தால் அடித்து உடைக்கப்பட்டதும், 6.5 அடி உயரமும், 3 அடி அகலம் கொண்ட வெளியில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவுக்கல் இரவோடு இரவாக இராணும் ஏற்றிச் சென்றது பற்றியும் இராணுவத்தின் சப்பாத்து அடையாளங்கள் மற்றும் ஊடரங்கு நேரமாகையால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தமிழர்களின் வேதனையையும், இது சம்பந்தமாக கிறிஸ்தவ யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் 4 ஆயர்கள் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையையும் கையளித்திருந்தனர். தொடர்ந்தும் ஏனைய மாநகரங்களில் இக்கவனயீர்ப்புப் போராட்டமும் 18 ஆம் நாள் பாரிசின் மத்தியில் பஸ்தில் (பிரெஞ்சுப் புரட்சியின் நினைவுச் சின்னம் அமைந்துள்ள இடத்தில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும். இதில் பல பிரெஞ்சு அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments