சீமானுக்கு மூன்றாவது இடம்!! துரதிர்ஷ்டம் வெற்றிவாய்ப்பில்லை!


தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தைப் பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாம் தமிழர் கட்சி ஆகிய ஐந்துமுனை போட்டி நிலவியது. இதில் திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் ஆகிய 4 கட்களுடன் கூட்டணி வியூகம் அமைத்து

தேர்தலை எதிர்கொண்டன.

2016-ம் ஆண்டு முதலே யாருடனும் கூட்டணி இல்லை என்ற உறுதியுடன் தேர்தல் களத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சி இம்முறையும் தனித்தே களம் கண்டது.

தமிழகத்தின் முன்னணி அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்பாகவே 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் என அறிவித்து புதுமையை புகுத்தியது நாம் தமிழர் கட்சி. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என்று அறிவித்த சீமான், பின்னர் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.

தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி திருவொற்றியூர் தொகுதியில் சீமானுக்கு 3-ம் இடம் கிடைத்துள்ளது. அதேபோல் தமிழகத்தின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளைப் பெற்ற கட்சியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது. அதேவேளையில் அமமுக, மக்கள் நீதிமய்யம் ஆகிய கட்சிகளை பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாவது இடம்பெற்ற நாம் தமிழர் கட்சி, 2017-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2.15% வாக்குகள் பெற்று நான்காவது இடத்தைப்பிடித்தது.

2019-ம் ஆண்டு 22 தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட்டு 3.15% வாக்குகள் பெற்ற அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 3.9% வாக்குகளைப் பெற்றது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சியினர் தங்களது வாக்கு சதவிகிதத்தை உயர்த்தியிருப்பதாகவே தெரிகிறது. ஆனாலும், கட்சி ஆரம்பித்து முதன்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசான் வெற்றிமுகத்தை நோக்கி நகர்கிறார். ஆனால், பலமுறை தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஓரிடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை என்பதே துரதிர்ஷ்டம்.

குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகிவருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்போது, இது வெளிப்பட்டு வருகிறது! முழுமையான வாக்கு சதவிகிதம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தான் தெரிய வரும்.!

No comments