முள்ளிவாய்க்கால் வந்தது நினைனவுநடுகல்!முள்ளிவாய்க்காலில் கொரோனா தொற்று சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமென முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் பொது நினைவுக்கல் நடுகை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பால்  இன்று மாலை கொண்டுவரப்பட்டு இறக்கி வைக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை சுற்றி இலங்கை காவல்துறையினரும் அவர்களிற்கு பாதுகாப்பாக இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.No comments