பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவாக ஐரோப்பாவில் ஒன்றரை லட்சம் மக்கள் திரள்வு!


இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே வன்முறை மோசமாகியுள்ள வேளையில் லண்டன், பெர்லின், மட்ரிட், பாரிஸ் ஆகிய நகரங்களில் பாலஸ்தனம மக்களும் மனிதவுரிமை ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் காஸா மீதான தாக்குதல் நிறுத்தப்படவேண்டும் என்ற வாசகங்களைக் கொண்ட பதாகைகளை தாங்கி,பாலஸ்தீனத்திற்குச் சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.அந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 150,000 பேர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வட அமெரிக்கா,பிரெஞ்சுத் தலைநகர் பாரிஸில் அதிகாரிகள் விதித்திருந்த தடையைமீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஜெர்மானியினின் தலைநகர் பேர்லினிலும் , பல்பேறு மாநில தலை நகரங்களிலும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments