9 குழந்தைகளைப் பெற்றெடுத்தார் மாலி நாட்டுப் பெண்


ஆபிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள மாலிநாட்டைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவா 9 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். 

தாயையும் குழந்தைகளையும் நல்லமுறையில் பராமரிப்பதற்காக மாலி அரசாங்கம் மொரோக்கோ நாட்டுக்கு அனுமதிப்பியிருந்தது.

அங்கே ஹலிமா சிஸ்ஸேவை ஸ்கேன் செய்தபோது அவரின் உடலில் 7 குழந்தைகள் வளர்வதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். ஆனால் பிரசவத்தின் போது அவருக்கு 9 பிள்ளைகள் பிறந்துள்ளன.

ஸ்ஸேவுக்கு 5 பெண் குழந்தைகளும் 4 ஆண் குழந்தைகளும் பிறந்ததுள்ளன என மாலி நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தாயும் குழந்தைகளும் நலமுடன் இருக்கிறார்கள் என அவரது கணவர் கூறியுள்ளார்.

2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எட்டு குழந்தைகளைப் பெற்ற ஒரு பெண், ஒரே குழந்தையில் பிரசவிப்பதற்காக அதிக குழந்தைகளைப் பெற்றதற்காக கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1971 ஆண்டில் ஆஸ்திரேலியாவிலும் 1999 ஆண்டில் மலேசியாவிற்கும் குழந்தைகள் பிறந்தன. ஆனால் குழந்தைகளில் எவரும் சில நாட்களுக்கு மேல் உயிர் வாழவில்லை என்பது நினைவூட்டத்தக்கது.No comments