இலங்கையில் தொடங்கியது கொத்தணி மரணம்?இலங்கையிலும் கொரோனா காரணமாக வீடுகளிலேயே மக்கள் மரணிக்க தொடங்கியுள்ளமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.

தென்னிலங்கையின் மாலம்பே பிரதேசத்தில் மூவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளுக்கு அமைய, அவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே வீட்டில் வசித்துவந்த கணவன், மனைவியும் அயல்வீட்டு பெண்ணொருவரும் அடங்குவதாக அப்பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்கள் 84 – 91 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த தம்பதியினரின் மகனும் அவரது மனைவியும் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், உயிரிழந்த மற்றைய பெண்ணின் மகளும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


No comments