வடக்கில் இருபகுதிகள் முடக்கம்!வடமாகாணத்தின் கொடிகாமம் மற்றும் வவுனியா பூவரசங்குளம் பகுதியின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளது. 

சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் பிரதேசத்தில் அதிக அளவு கொரோனா தொற்றாளர்கள்  இனங் காணப்பட்டுள்ள நிலையில் கொடிகாமம் பிரதேசத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொடிகாமம் பொதுச் சந்தை மற்றும் கடைத்தொகுதி மூடப்பட்டுள்ள நிலையில் குறித்த பகுதியானது வெறிச்சோடிய காணப்படுகின்றது.

மேலும், வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவில் குருக்கள் புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் முடக்கப்பட்டுள்ளன அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உள்பட்ட கொடிகாமத்தில் இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் மறு அறிவித்தல்வரை முடக்கப்பட்டுள்ளது

கொடிகாமம் வடக்கு மற்றும் கொடிகாமம் மத்தி ஆகிய இரண்டு கிராம சேவையாளர் பிரிவுகளுமே இன்றிரவு முதல் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments