சுவீடனில் கண்டெடுக்கப்பட்ட 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்கலப் புதையல்

மேற்கு சுவீடனில் உள்ள தனது ஓரியண்டரிங் கிளப்பிற்காக ஒரு காட்டை ஆய்வு செய்த ஒருவர் 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வெண்கலப் புதையல் ஒன்றைக்

கண்டுபிடித்தார்.

கண்டெடுக்கப்பட்ட புதையிலில் நெக்லஸ், வளையல்கள் மற்றும் ஆடை ஊசிகள் போன்ற சுமார் 50 பொருட்கள் உள்ளன.

இதுகுறித்து கார்ட்டோகிராஃபர் தாமஸ் கார்ல்சன் தெரிவிக்கையில்:

இது ஒரு விளக்கு என்று நான் முதலில் நினைத்தேன், ஆனால் நான் நெருக்கமாகப் பார்த்தபோது அது பழைய நகைகள் என்று பார்த்தேன் என்றார்.

சுவீடன் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு காட்டில் இதுபோன்ற ஒரு புதையலைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிது என்றும் பண்டைய பழங்குடியினர் பொதுவாக இத்தகைய பொருட்களை ஆறுகள் அல்லது ஈரநிலங்களில் விட்டுச் சென்றனர் என்றனர்.

கோதன்பர்க்கிலிருந்து வடகிழக்கில் சுமார் 48 கி.மீ (30 மைல்) தொலைவில் உள்ள அலிங்காஸ் நகருக்கு அருகில் இந்த காடு உள்ளது.


No comments