பொதுமக்களின் பாவனைக்கு திறக்கப்பட்டது உலகின் மிக நீளமான தொங்கு பாலம்!

போர்ச்சுக்கலில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக நீளமான தொங்கு  பாலம், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.

அரோக்கா என்ற நகரில் ஓடும் பைவா நதியை கடக்க சுமார் 516 மீட்டர் நீளத்திலும் 175 மீட்டர் உயரத்திலும் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 20 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டிருக்கும் இந்த தொங்கு பாலமாலத்தை அமைக்க 2 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

தற்போதைக்கு உள்ளூர் மக்களுக்கு மட்டுமே பாலத்தை கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மே. 3 ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகளும் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


No comments