நெல்லியடி: சுகாஸ் வெதுப்பகமும் பூட்டு!


கொரோனா தொற்று காரணமாக நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்திற்கு கரவெட்டி சுகாதார பிரிவினரால் இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

கரவெட்டி சுகாதார பிரிவினரால் தமது பிரதேசத்திற்கு உட்பட்ட வர்த்தகர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை நெல்லியடி சுபாஸ் வெதுப்பக ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் சிலரை தனிமைப்படுத்தியதோடு வெதுப்பகத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியிற்கான பெருமளவு பாண் உற்பத்திகள் சுபாஸ் வெதுப்பகம் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது.


No comments