மாவட்ட செயலகத்தில் மூடல்!யாழ்.மாவட்ட செயலக மேலதிக மாவட்ட செயலர் கொரோனா தொற்றிற்குள்ளானதால் மாவட்ட செயலகத்தின் சில பகுதிகள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பல கூட்டங்களில் மேலதிக மாவட்ட செயலர் பங்கெடுத்த வகையில் தொற்று பல மட்டங்களில் ஏற்பட்டிருக்கலாமென்ற அச்சம் எழுந்திருந்தது.

இதனையடுத்து மாவட்ட செயலக பணியாளர்கள் 22பேருக்கு இன்று தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதேபோன்றே வடமராட்சி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வை நடாத்திய பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர்; கைது செய்துள்ளதுடன் உடமைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

வடமராட்சி துன்னாலை குடவத்தை பகுதியில் அனுமதியின்றி குடவத்தை பகுதியில் பிறந்த நாள் நிகழ்வு நடாத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலையடுத்து நேரில் சென்று பார்வையிட்ட போது பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் பிறந்த நாள் நிகழ்வை  ஏற்பாடு செய்த பெண் ஒருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


No comments