ஊரிக்காட்டு கடற்கரையில் 39 மில்லின் ரூபா கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் தொண்டமானாறு – ஊரிக்காடு கடற்கரையில் 131.8 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு (22) 10.30 மணியளவில் ஈருறுளியில் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் இந்த கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

4 பொதிகளில் பொதியிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை சுமார் 39 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா, கடற்படையினரால் எரியூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments