நடிகர் விவேக் காலமானார்


மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்  காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமது வீட்டில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 அளவில் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

59 வயதான விவேக், நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள அவர், சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளை ஆர்வத்துடன் முன்னெடுத்து வந்தார்.

No comments