மிரட்டல் , அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்யமுடியாது!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் விஜயதாஸ ராஜபக்ஷ மட்டும் அச்சுறுத்தப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

எனவே, மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும், அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அநுரகுமார குறிப்பிட்டார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால், ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்துக்குப் பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு அல்லது அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். அதனைவிடுத்து நேரடியாக அச்சுறுத்த முடியாது- என்றார்.No comments