மட்டக்களப்பில் கசிப்புப் பொருட்கள் மீட்பு! உற்பத்தியாளர்கள் தப்பியோட்டம்!


மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பன்சேனைப் பகுதியில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடம் காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை பன்சேனை நல்லதண்ணீர்குளம் காட்டுப்பகுதியல் இக்கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது.

சுற்றிவளைப்பின் போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து காட்டுக்குள் தப்பியோடியுள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் கச்சிப்பு உற்பத்தி செய்யும் பொருட்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

6200 லீட்டர் கோடாவும் 30 லீட்டர் ஸ்பிட்டும் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.No comments