சீனத் தூதுவர் தங்கியிருந்த உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு! நால்வர் பலி!


பாகிஸ்தானின் தென்மேற்கு நகரமான குவெட்டாவில் உள்ள உல்லாச விடுதியில் அமைந்து மகிழுந்துத் தரிப்பிடத்தில் குண்டு வெடித்ததில் 4 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பலுசிஸ்தான் மாகாண உள்துறை மந்திரி ஜியா லாங்கோவ் கருத்துப்படி, பாகிஸ்தானுக்கான சீனாவின் தூதர் நோங் ரோங் செரீனா உல்லாச விடுதியில் விருந்தினராக கலந்து கொண்டார். நேற்றுப் புதன்கிழமை குண்டு வெடித்த நேரத்தில் சீனத் தூதர் விழா ஒன்றில் கலந்துகொண்டதால் விடுதியில் இல்லை என்று லாங்கோவ் அல் ஜசீராவிடம் கூறினார்.

இத்தாக்குதலுக்கு எதுவித விபரங்களையும் கூறாமல் பாகிஸ்தான் தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்.


No comments