ஜேர்மனியில் போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மோதல்!


ஜேர்மனியில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதை கண்டித்து நேற்றுப் புதன்கிழமை பெர்லினில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.

கொரோனா பரவல் அதிகரித்த போதும் 16 மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படாததால் அதிபர் ஏஞ்செல்லா மெர்கெல் ((Angela Merkel)) இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.

அதனைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். காவல்துறையினர் மீது போத்தல்களை வீசிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments