வடகிழக்கு முப்படை வசம்!



 பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நாட்டின் 20 மாவட்டங்களுக்கு முப்படைகளை சேவையில் அமர்த்தும் வகையிலான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வெளியிட்டுள்ளார்.

நாளைய தினம் (22) முதல், தேவை ஏற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளை அழைக்க முடியும் என ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்டி, மாத்தளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து மாவட்டங்களும் இந்த வர்த்தமானி அறிவித்தலில் உள்ளடக்கப்பட்டுள்ளது

No comments